திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக வேண்டி ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுரம் வளாகத்தின் முன்பு உலக மக்கள் நன்மைக்காக வேண்டி திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த இசை விழாவில் சரஸ்வதி உற்சவம் பாடவிதி விழா நடைபெற்றது உற்சவர்கள் முன்பு 108 நாதஸ்வரங்கள் இசைகளுடன் மாதவி உலா வந்து ராஜா கோபுரம் முன்பு நிறைவடைந்தன இந்த விழாவில் தவில் நாதஸ்வரம் என தங்களுடைய திறமைகளை இசைக் கலைஞர்கள் வெளிப்படுத்தினர் மற்றும் 108 நாதஸ்வரம் இசை விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டச் செயலாளர் குமார். மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் . துணைத் தலைவர்கள். பாண்டியன். ஐயப்பன். துணைச் செயலாளர்கள். மணிகண்டன் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும். சங்க ஆலோசகர் சரவணன் நன்றி உரை கூறினார்..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home