Friday, March 13, 2026

வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

 விழாவிற்கு ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையயின் மூத்த செவிலியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

 விழாவிற்கு சாய் அப்போலோ நர்சிங் கல்லூரி முதல்வர் அன்பரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சாய் அப்போலோ உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி,தொழுதூர் முதல்வர்கள் பிரியதர்ஷினி, சுஷ்மிதா,கனிமொழி கலந்து கொண்டனர்.

 விழாவில் குத்துவிளக்கேற்றி விழாவை சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்த ஜோதி தொடங்கி வைத்தார் மேலும் மகளிர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டி,கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறந்த பெண்மணிகளுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர்.அம்பிகா தங்கதுரை வெள்ளி காயன், பரிசுகள் பொன்னாடை வழங்கி கெளரவித்தார்.

 மகளிர் தின சிறப்புகளை பற்றி கல்லூரியின் விரிவுரையாளர்கள் சிவரஞ்சனி,தீபா, நளினி சண்முகப்பிரியா, ராதா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர்கள் இறுதியில் இரண்டாமாண்டு மாணவி விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home