Tuesday, October 24, 2023

அரசு பேருந்தும் டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 7 பேர் உடல் நசுங்கி பலி

திருவண்ணாமலை அக் 23-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச்சாலையில் அந்தனூர் பகுதியில் அரசு பேருந்தும் டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் காரில் பயணம் செய்த 4 நபர்கள் மற்றும் எதிரே வந்த பேருந்தில் பயணம் செய்த 10 நபர்கள் என 14 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி டாட்டா சுமோ காரில் சுமார் பத்து நபர்கள் பயணம் செய்தனர். பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து செங்கம் அருகே வந்து கொண்டு இருந்தது. அவ்வாறு வரும்போது செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதி அருகே திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற டாடா சுமோ காரும் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டாடா சுமோ காரில் பயணம் செய்த 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகினர். மேலும் காரில் பயணம் செய்த நான்கு நபர்கள் மற்றும் எதிரே வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 10 நபர்கள் என 14 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மேல்செங்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home