ஒன்றிய அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் 1000க்கும் மேற்பட்டோர் கைது



தருமபுரி செப் 12-

விலைவாசி உயர்வு,வேலையின்மை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தார்.

மறியல் போராட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, பொதுதுறை நிறுவனங்களில் காலிப் பணி இடம் நிரப்பபடாமல் இருப்பது,மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது, மணிப்பூர் மற்றும் அரியானாவில் மதக்கலவரத்தை தூண்டி பொது மக்களை படுகொலை செய்வது உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன்,மாவட்ட துணை செயலாளர்கள் கா.சி. தமிழ்க்குமரன் எம்.மாதேஸ்வரன்,மாவட்ட பொருளாளர் சி.மாதையன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.சின்னசாமி, கமலாமூர்த்தி,விதொச மாநில செயலாளர் ஜெ.பிரதாபன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபால்,காதர் உள்ளிட்ட பலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட
1000-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال