கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரிச்சைப்பழம் விளைச்சல் அமோகம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி, லாபகரமான சாகுபடிக்கு விவசாயிகள்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுவை மிகுத்த பேரிச்சைப்பழம் விளைச்சல் அமோகம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி, லாபகரமான சாகுபடிக்கு விவசாயிகள் மாற வேண்டும் மென வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடிக்கு பேருப்போன
 இம்மாவட்டத்தில் தற்போது அரபு நாடுகளில் விளைவிக்கப்படும் 
பேரிச்சை சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தவளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன் இவர் தக்காளி, நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்து வந்துள்ளார்.
எதிர்பார்த்தப்படி லாபம் கிடைக்காததால் மாற்று பயிர் ஏதாவது சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் தான் அரபு நாட்டில் இருந்து பேரிச்சை செடிகளை வாங்கி வந்து இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்துள்ளார்.
எதிர்பார்த்தப்படி நன்கு வளர்ந்து பேரிச்சை மரத்தில் கொத்து கொத்தாக பேரிச்சை விளைச்சலை கண்டு விவசாயி ஈஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார்,
ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ.150 க்கு வியபாரிகள் கொள்முதல் செய்ய முன்வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.
மேலும் விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காததால் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி அரபு நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு ஒருஏக்கர் நிலத்தில் நடவு செய்து மூன்றாவது ஆண்டில் இருந்து பேரிச்சம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பேரிச்சை கொத்து,கொத்தாக அதிக விளைச்சல் கண்டு உள்ளது, ஒவ்வொரு குலைகளிலும் 10 கிலோ முதல் 20 கிலோவரை உள்ளது இன்னும் ஒரு சிலத் தினங்களில் அறுவடைக்கு தயராகி விடும் நிலையில் பல்வேறு இடங்ககளில் இருந்து வியாபாரிகள் ரூ.150 க்கு கொள்முதல் செய்ய தயராக இருப்பதாகவும், இதனை
வியபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயி ஈஸ்வரன் மகிழச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் விவசாயிகள் லாபம் தரக்கூடிய சாகுபடிக்கு மாறினால் விவசாயத்தில் அதிக லாபம் பெறலாம் என்று குறிப்பிட்டார்.
Previous Post Next Post

نموذج الاتصال