செய்யாறில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


செய்யாறு, பிப் 27: 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செய்யாறு நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், செஞ்சி ராமச்சந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் திரைப்பட இயக்குனர் நடிகர் ரவிமரியா, தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகிர் உசேன், சிட்கோ சீனு, என்.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதா ஆற்றிய மக்கள் தொண்டு மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினர்கள். கூட்டத்தில் அவைத்தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், திருமூலன், ராமநாதன், மாவட்ட நிர்வாகிகள் விமலா மகேந்திரன், மெய்யப்பன், அருணகிரி, ரவிச்சந்திரன், முனுசாமி, கோபால், கோவிந்தராஜ் அருண், இளையராஜா, தணிகாசலம், சுதாகர், மகாதேவன் , மனோகர், அபிராமி சுரேஷ், திருச்சிற்றம்பலம், எழில், ரமண முருகன்,பாலாஜி, வெங்கடேஷ், ராஜி, சரவணன், வெற்றிச்செல்வன், மேகநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال