தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் திமுக - அதிமுக கருத்து மோதல்



தருமபுரி, மார்ச் 2 :

தருமபுரியில் இன்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வின்போது, அதிமுகவினர் திமுவினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில், தேர்தல் சிறப்பு நேர்க்காணல் (டிபேட்) நிகழ்ச்சி வள்ளலார் திடலில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன், திமுக சார்பில் தருமபுரி மக்களவை உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஆ. மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் மூவரும் பங்கேற்றனர்.

நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்து மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக சார்பில் அன்பழகன் பேசும்போது, திமுக சார்பில் ஆ. மணி இடையிடையே பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள் நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். இதில் திமுக நிர்வாகியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கண்காணிக்காப்பாளர் எஸ். எஸ் மகேஸ்வரன் மற்றும் தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இரண்டு கட்சியினரும் வெளியே சென்றனர் இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
Previous Post Next Post

نموذج الاتصال