'பாரத் ஜோடோ யாத்ரா' ஓராண்டு நிறைவையொட்டி சிவகங்கையில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர் பகுதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களால் முன்னெடுத்து வெற்றிகரமாக நிரைவு செய்யப்பட்ட "பாரத் ஜோடோ யாத்ரா" எனப்படும் 'இந்திய தேசிய ஒற்றுமை பயணத்தின்' ஓராண்டு நிறைவுப் பெற்றதை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் பேரணி மேற்கொள்ளப்பட்டது. 

இப்பேரணியானது மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ப. சிதம்பரம் அவர்களும் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் தலைமையிலும், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ஏ.சி. சஞ்சய்காந்தி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன் குமார் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் கட்சி கொடி ஏந்தியும் முழக்கமிட்டும் சிவகங்கை நகர் பகுதிகளில் பேரணி பின்பற்றப்பட்டது. கூடுதலாக இப்பேரணியானது காரைக்குடியில் தொடங்கி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் இதில் மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி, இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகிய அணிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Previous Post Next Post

نموذج الاتصال