ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி.



ஆரணி செப் 16

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.

ஆரணியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. இதில் பலவிதமான வரலாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

கண்காட்சியை மாணவிகளும், ஆசிரியர்களும் ஆர்வமாக கண்டுகளித்தனர். சோழர் காலத்து வாள், முகலாயர் காலத்து குத்து வாட்கள், பழங்காலத்து அம்பு, எலும்பில் செய்யப்பட்ட மணிமாலை, நீர்வாழ் உயிரினங்களின் எலும்பு படிமங்கள். ஓலைச்சுவடிகள், நவாபுகள் காலத்து கூஜா, ஆங்கிலேயர் காலத்து சாட்டை, சமஸ்கிருத செப்பேடு என பலவிதமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
சந்திரயான் -3 சோதனையின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளை மணல், திருச்செங்கோடு அருகில் இருந்து கொண்டுவரப்பட்டு, அதன் மீது சந்திரயான் -3 ன் மாதிரி வடிவம் வைக்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.
கண்காட்சியை, பள்ளியின் தலைமை ஆசிரியை, பா.தாமரைச்செல்வி தலைமையேற்று நடத்தினார். கண்காட்சிக்கான பொருட்களை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் ஏற்பாடு செய்திருந்தார் மேலும் கண்காட்சி குறித்து விளக்க உரையாற்றினார்.
பள்ளி ஆசிரியைகளான ஜி.வித்யா, எம்.பூங்கோதை ஆகியோர் மாணவிகளுக்கு கண்காட்சிப் பொருட்களை விவரித்துக் கூறினர். நிகழ்ச்சியின் முடிவில் உதவித் தலைமை ஆசிரியர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.
Previous Post Next Post

نموذج الاتصال