செய்யாறு, செப். 11:
செய்யாறில் உலக இயன்முறை தினத்தையொட்டி இயன்முறை ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் உலக இயன்முறை தினத்தையொட்டி செய்யாறு டவுன் பங்களா தெருவில் உள்ள ருகி சாய் கிளினிக்கில் இயன்முறை ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது நிகழ்ச்சிக்கு மூத்த மருத்துவர்கள் ஜானகிராமன் நிர்மலா தேவி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ருகி சாய் கிளினிக்கின் நிறுவனர் மருத்துவர் கண்மணி வரவேற்றார். ரிவர் சிட்டி லயன் சங்க தலைவர் கி.கோபிராஜ், பொருளாளர் ச.துரைசாமி, மாவட்டத் தலைவர்கள் பி.நடராஜன் வி.தெய்வசிகாமணி, பி.எல்.ரவி, ந.கேசவன், பிரேம்குமார், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயன்முறை மூத்த மருத்துவர் மதன் இயன்முறை மருத்துவத் தினத்தை பற்றியும் இயன்முறை மருத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முகாமில் 53 பேருக்கு இலவச இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற இயன்முறை மருத்துவர்களுக்கு நினைவு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
Tags
திருவண்ணாமலை