தர்மபுரி அக் 21-
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி பேட்டி...
தருமபுரி அருகே... 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது 6 கிலோ தங்கம் நான்கு சொகுசு கார்கள் 8 செல்போன்கள் பறிமுதல்....மேற்கு மண்டல ஐஜி நேரில் பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்.. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்.. பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் ஐந்து கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது..
இந்த நிலையில் கொள்ளையர்களைகைது..
தங்கம் பறிமுதல்
கோவை மேற்குமண்டல ஐஜி பவானீஸ்வரி பார்வையிட்டு சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை பாராட்டி பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது
கடந்த 28.09.2023 அன்று அதிகாலை 01.45 மணிக்கு பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாம்பட்டிகிராமத்தில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ தீக்ஷா நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை
வழிமறித்து. 5 கிலோ 950 கிராம் (743 பவுன்) எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பணம்ரூ.60 லட்சம் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில்
காரிமங்கலம் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கொள்ளைபோன மொத்த சொத்தின் மதிப்பு ரூ.3,95,00,000 ஆகும்.உடனடியாக சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில்நகை கடை உரிமையாளர் திரு.பிரசன்னா (40) த/பெ. கோகுல கிருஷ்ணன், எண் 15.
பழனிச்சாமி தோட்டம், எழில் நகர் பின்புறம், செல்வபுரம், கோயமுத்தூர் என்பவருக்குசொந்தமான மேற்சொன்ன ஸ்ரீ தீக்ஷா நகைக்கடைக்காக தங்க நகைகள் வாங்கிவரும்.பொருட்டு, நகைக்கடை மேலாளர் திரு.விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியாக சுரேஷ் குமார் மற்றும் ஓட்டுனர் திரு.ஜெய்சன் ஆகியோர் மேற்படி நகைக்கடைஉரிமையாளரின் காரில் பெங்களூரு அவின்யூ சாலையில் அமைந்துள்ள தர்சன் நகைக்கடையில் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும்
கோயமுத்தூர் நோக்கி சென்றுகொண்டிருக்கும் வழியில் மேற்படி பெரியாம்பட்டிபூலாப்பட்டி ஆற்றின் மேம்பாலம் முடியும் இடத்தில் அடையாளம் தெரியாத 4 கார்களில் வந்த 15 நபர்கள் மேற்படி நகைக்கடை ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த காரை
வழிமறித்து, காரிலிருந்த மேற்படி தங்க நகைகளையும், காரில் வைத்திருந்த பணத்தைகொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கோயமுத்தூர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி மற்றும் சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் அமைக்கப்பட்ட 10 தனிப்படைகள் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், 29.09.2023 அன்று நகைக்கடை ஊழியர்கள் பயன்படுத்திய எடியோஸ் காரை கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லபுரியம்மன்
கோயிலருகில் வெட்காளியம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து, அந்த காரை கைப்பற்றப்பட்டது.
மேற்படி தனிப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் மற்ற அறிவியல் சார்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விவரங்களில் குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டறியப்பட்டது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1) சுஜீத் (29), 2) சரத் (36) மற்றும் 3)பிரவீன் தாஸ் (33) ஆகியோரை 16.10.2023 அன்று முதற்கட்டமாக கோயமுத்தூரில்வைத்து கைது செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மற்ற எதிரிகளான 4) கே. ஏ. சிகாபுதின் (எ) க்ஷிபு (36), 5)எம். எஸ். சைனு (30), 6)அகில் (எ) ஆம்புலன்ஸ் (30) மற்றும் 7) எ. எஸ். சஜிஸ் (எ) குட்டன்(35) ஆகியோரை 20.10.2023 ஆம் தேதி கைது செய்யப்பட்டது.மேலும், முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சிரில் ஆகியோரைசென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் 4 கார்களும் (Suzuki Baleno &
Suzuki Ertiga, BMW, Suzuki Breeza), 8 செல்போன்களும், சுமார் 33 கிராம்
எடைகொண்ட இரண்டு தங்கச் சங்கலிகளும் கைப்பற்றப்பட்டும் மற்றும் மொத்தம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் 5.950 கிலோ கிராம் அப்படியே கைப்பற்றப்பட்டும்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.19,50,000/- ம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட
பணத்தில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் வாங்கிய BMW காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.மொத்தம் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் ரூ.3,71,24,900 ஆகும். மேலும் தலைமறைவாக உள்ள 6 குற்றவாளிகளை பிடிக்க தொடர் புலன் விசாரணை நடைபெற்றுவருவதாக மேற்கு மணடல ஐஜி பவானீஸ்வரி பேட்டியில் தெரிவித்தார்.
Tags
தர்மபுரி