தூத்துக்குடி அக் 29-
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளையம்மாள்புரம் ஊராட்சி, அருங்குளம் ஊராட்சி, நமச்சிவாயபுரம் ஊராட்சி, சக்கம்மாள்புரம் ஊராட்சி, சிவஞானபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ''மக்கள் களம் - மக்களின் குறை கேட்டல்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி.எம்பி அவர்கள், உடன் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமிகு கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு.லெட்சுமிபதி, மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் திரு.அன்புராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags
தூத்துக்குடி