சேலம் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வீரபாண்டி ராஜா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், ஆக.2-

சேலம் முன்னாள் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டிராஜா 2-ம் ஆண்டு நினைவு நினைவு நாளை யொட்டி பூலாவரியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆகியோர் கலந்துகொண்டு வீரபாண்டி ராஜா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், செழியன் ஆகியோர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து தி.மு.க மூத்த முன்னோடிகள் 50 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.இதில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கோபால், சுந்தரம், முன்னாள் மேயர் ரேகா, பிரியதர்ஷினி, முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், கோபால் செயற்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், உமாசங்கர்,மாணிக்கம், ராஜா, ரத்தினவேல், மூர்த்தி, அன்பு, செழியன், மாது, சித்தார்த்தன், நகர செயலாளர்கள் பாலசுப்ரமணியம், வேல்முருகன் சீனிவாசன், மண்டல தலைவர் கலைய முதன், கவுன்சிலர்கள் வக்கீல் குணா, ஜெயக்குமார், பனமரத்துபட்டி ராஜா, மதுசூதனன் செந்தூர் கார்த்தி, சங்கர் நகர் சுந்தரம், வின்சென்ட் நாகா, கிச்சிப்பாளையம் நாகராஜ், சிவராமன், ரமேஷ், குமார், காந்தி, ஆனந்த், திமுக தொண்டர்கள் தொழில் அதிபர்கள், மாற்று கட்சி மாவட்ட தலைவர் கள் திரளாக கலந்து கொண்டனர். 
வீரபாண்டி டாக்டர் மலர்விழி ராஜா, கீர்த்திகா ஜெயரத்னா, செந்தில் ஆனந்த், மகேஸ்வரி காசி, நிர்மலா மதிவாணன், டாக்டர் தருண், டாக்டர் வீரபாண்டி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال