தருமபுரி நவ 19-
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் வன்கொடுமை தடுப்பு சட்டம் நீர்த்து போகாத வகையில் அமலாக்க வலியுறுத்தி இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை சாசனம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் அருகே உள்ள தளவாய்அள்ளி, சோளப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் எம்.மாதேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார்.
பட்டியலினம், பழங்குடி மக்களின் வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகாத வகையில் அமுலாக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிளாளர்களுக்கு 3 மாத கால நிலுவை தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.100நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ600 வழங்வேண்டும். நிலமற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கோரிக்கை சாசனம் கையெழுத்து இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இண்டூர் வட்டார செயலாளர் பி.மாது,துணை செயலாளர் வி.மணி,விதொச வட்டார தலைவர் எம்.முனுசாமி, வட்டார செயலாளர் எம்.மாதையன், துணை செயலாளர் மாதேசன்,நிர்வாகிகள் சங்கரன், முனுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி