தர்மபுரி நவ 7-
தமிழக அரசு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் இன்று தருமபுரி போக்குவரத்து துறை மற்றும் சமுக ஆர்வலர்கள் இணைந்து 4 ரோடு சந்திப்பு சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்பவர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் சின்னசாமி தலைமையில் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இலவசமாக பட்டாசு பாக்ஸ்களை வழங்கி அவர்களை ஊக்கபடுத்தினார்.
மேலும் தலைகவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது எனவும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்க ;கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். போக்குவரத்து காவல் துறையினரின் இந்த செயல் பொது மக்களிடையே பாராட்டை பெற்றது.
Tags
தர்மபுரி