தருமபுரி நவ 9-
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி - தருமபுரி ஒன்றியம், அக்கமனஅள்ளி ஊராட்சி - நடுப்பட்டி சமுதாய கூடம் பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி.செந்தில்குமார் எம்.பி., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதைதொடரந்து கந்தன கொட்டாய், புளியம்பட்டி, கருப்பூர், பெரியகுரும்பட்டி, நல்லாம்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்குகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி (வ) ஒன்றிய கழகச் செயலாளர் என்.ஏ.மாது, மொரப்பூர் (மே) ஒன்றிய கழகச் செயலாளர் கே.எம்.ரத்தினவேல், பொதுக்குழு உறுப்பினர் பி.லட்சுமணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எம்.மேகராஜ்
கிளை செயலாளர்கள் டி.சேகர்
மாதேஷ், முருகன், பழனிவேல், மாது
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி