பாலக்கோடு கரகதஅள்ளியில் சமுதாய வளைகாப்பு விழாவை முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்து விளக்குகேற்றி துவங்கி வைத்தார்.


பாலக்கோடு நவ 3-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி சமுதாய திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைப்பெற்ற சமூகநலம் ,மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வளைகாப்பு நிகழ்ச்சியை துவங்கி வைத்து, கர்பிணி பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், வெற்றிலைபாக்கு தட்டு, புடவை அடங்கிய சீர்வரிசை தட்டுக்களை வழங்கினார்.

இதில் பாலக்கோடு, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 100 கர்பிணி பெண்களுக்கு நலங்கு வைத்தல், வளையல் அணிவித்தல் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.


கர்பிணி பெண்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருவதாகவும், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்பிணி தாய்மார்களுக்கு சத்துமாவு, சத்துமாத்திரைகள், கர்பகால பண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும்  அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் கருவுற்ற நாள் முதல் குழந்தை 
குழந்தை பிறந்தது 2 வயது வரை மொத்தம் 1000 நாட்கள் முக்கியத்துவம் குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கர்ப்பிணிகள் அனைவருக்கும் அறுஞ்சுவை உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், அதிமுக ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சித்ரா, ஜெயந்தி, சமுதாய சுகாதார விழிப்புணர்வு செவிலியர் மாதம்மாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال