பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி - ஏரியூர் ஒன்றியம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சி - சிகரலஅள்ளி ஊர்ப் பொதுமக்கள் கிணறு அருகில் தனது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏரியூர் ஒன்றிய கழகச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் என்.செல்வராஜ், பென்னாகரம் (தெ) ஒன்றிய கழகச் செயலாளர் மடம் முருகேசன், தருமபுரி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சென்னயன், தருமபுரி (கி) மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் கோ.அசோக்குமார், தருமபுரி (மே) மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி