தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் மிளிரும் விளக்குகள் விபத்துகளை தடுக்க துரித நடவடிக்கை


தருமபுரி, ஜன 3- 

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகனைத் தடுக்கும்வகையில் 35 இடங்களில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்- 44 தொப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள கணவாய் சாலை யைக் கடந்து செல்கிறது. இந்த கணவாய், சாலைப் பாளையம் சுங்கச்சாவடியைக் கடந்து, சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்தை அடுத்து தொடங்கி, கட்டமேடு, இரட்டைப்பாலம் வழியாக காவ வர் குடியிருப்பு வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு வளைவுகளு டன் தாழ்வாகக் கடந்துச் செல்கிறது. 

இந்தியாவின் மிகநீண்ட தேசிய நெடுஞ்சாலையான இச்சாலையில், தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் சாலை வளைவுகளுடன் தாழ்வாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், சாலை அமைப்பிலேயே கோளாறு 
உள்ளதாகவும் இச்சாலையைக் கடந்துச் செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். 

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகன ஓட்டுநர்கள், தொப்பூர் கணவாய் சாலையைக் கடக்கும் போது சாலையின் அமைப்பு தெரியாமல், சில நேரங்களில் அவர்களின் கட்டுப் பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
தொப்பூர் கணவாய் சாலையில் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் ஒலிபெருக்கி மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மெதுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்துவது.

போதிய வெளிச்சம் பாய்ச்சும் வகையில் சாலையின் நடுவே விளக்குகள் பொருத்துவது. சாலையை அகலப்படுத்துவது, வாகனங்கள் கணவாய் சாலையில் நுழையும் இடத் தில் கனரக வாகனங்கள் இலகு ரக வாகனங்களை எனப் பிரித்து அனுப்புவது, சாலையின் நடுவே விழிப்புணர்வு பலகைகளை வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இத்தகைய நடவ டிக்கைகளால் விபத்துகள் குறைந் துள்ளன. 

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் நிதி நிறுவனம், பாளையம் கங்கச்சாவடி சார்பில், கடந்த இரண்டு நாள்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளைக் குறைக்க ஒரு பகுதியாக இந்த விளக்குகள் தற்போது பொருத்தப் பட்டுள்ளன. இவை இரவு முழுவதும் ஒளிர்ந்துக் கொண்டே இருப்பதால் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தி விபத்துகளைத் தடுக்க உதவியாக அமையும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தெரிவித்தார்.

மிளிரும்  விளக்குகள்: 

தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் தற்போது ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தனி யார் நிதி நிறுவனத்தில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.2 லட் சம் மதிப்பில், கணவாய் சாலையில் கட்டமேடு முதல் இரட்டைப் பாலம் வரையிலான சுமார் 3 கி.மீ.தொலைவுக்கு 35 இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த விளக்குகள் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு 
எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் பொருத்தப் பட்டுள்ளன.
Previous Post Next Post

نموذج الاتصال