சென்னை பிப் 14-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி DMK Youth Wing -ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்தாண்டு நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் பொறுப்பேற்றது முதல் அவர்கள் மேற்கொண்ட கழகப் பணிகளை ஆய்வு செய்கின்ற விதமாக இளைஞர் அணியின் மண்டலம் 1-க்கு உட்பட்ட மாவட்ட - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று நேரில் சந்தித்தார்கள்.
'நீட் விலக்கு நம் இலக்கு', இல்லந்தோறும் இளைஞர் அணி - மாநில மாநாடு - மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றை தனித்தனியாகக் கேட்டறிந்து. மினிட் புக் - புகைப்படங்கள் - பத்திரிகை செய்திகள் உள்ளிட்டவற்றை காண்பித்து, தங்களின் பணிகளை அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற லட்சியத்தை எட்டுகிற வகையில் அயராது களப்பணியாற்ற நிர்வாகிகளை அறிவுறுத்தினார்கள்
Tags
சென்னை