சென்னை பிப் 13-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு
தி.மு.கழகத்தின் முதல் தலைமையகமான ராயபுரம் அறிவகத்தில் 1970-ஆம் பணிக்குச் சேர்ந்து, அதன் பின்னர் அன்பகம், அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அண்ணா அறிவாலயம் என தலைமைக் கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த தலைமைக் கழக துணை மேலாளர் அண்ணன் அறிவாலயம் ஜெயக்குமார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றோம்.
சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள அவரது இல்லம் சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்ததோடு
முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்கள், நம் தலைவர்களின் எண்ணத்தை செயலாக்குவதில் வல்லவராக திகழ்ந்தார்கள்.
நம் தலைமைக் கழக அலுவல் பணிகளில் பல ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்களின் மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி கழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்திற்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது x தளத்தில் பதிவிட்டு இருந்தார் .
Tags
சென்னை