பல்லடம், ஜூன் 21-
பல்லடம் அருகே கிடாத்துறை,
பல்லவராயன்பாளையத்தில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது. பல்லடம் ஒன்றியம், பூமலூர் ஊராட்சி கிடாத்துறை, பல்லவராயன்பாளையத் தில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் நிதி ஒதுக்கீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பில், தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளாளவு கொண்ட இரண்டு புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்ப ணிப்பு செய்யும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதில், பூமலூர் ஊராட்சி தலைவர் பிரியங்கா, துணைத்தலைவர் நடராஜ், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் பரமசிவம்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் பூபதி, பாலசுப்பிரமணியம், சிவசாமி, வேல்முருகசாமி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
Tags
பல்லடம்