புலிகள் காப்பகம் அமைப்பதாக தெரிவித்து மலை கிராம மக்களை வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும் இரா.முத்தரசன்.


பென்னாகரம், ஆக.30 

தமிழகத்தில் மழைப்பகுதியை சார்ந்துள்ள கிராமங்களில் புலிகள் காப்பகம் அமைக்கப்படுவதாக தெரிவித்து பழங்குடியினரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கையை மாநில அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் புதன் வியாழன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் அந்தக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி மக்கள் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக தெரியவில்லை.
 பாஜக அரசு பல ஆயிரம் கோடி செலவில் குழந்தை ராமருக்கு கோயில் கட்டிய சைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலின் போது 400 இடங்களில் வெற்றி பெறுவேன் என தெரிவித்த நிலையில் வெறும் 242 இடங்களில் வெற்றி பெற்று மைனாரிட்டி அரசாக ஆட்சி அமைத்தது. இதில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதை மக்கள் விரும்பவில்லை என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமைந்தது போல் மற்ற மாநிலங்களில் அமைந்திருந்தால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய நிதிநிலை அறிக்கை,ரயில்வே துறை நிதி, கல்வித்துறை நிதி ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழகத்தினை மத்திய அரசு புறக்கணிக்கப்படுகிறது. தமிழக மீன் அவர்களை இலங்கை அரசு மற்றும் இலங்கை கடற்பறையினர் கைது செய்தும், படகு, வலைகள், உயிர்களையும் சேதப்படுத்தி துன்புறுத்தி வருகின்றனர். தேர்தலின் போது திமுக காங்கிரஸ் கட்சிகள் கட்சி தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தற்போது மீண்டும் பிரதமராக வந்துள்ள நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்டு தருவாரா?. தமிழக மீனவர்களை புறக்கணிக்காமல் கைது செய்யப்பட்டுள்ளவர்களை மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. விலைவாசி உயர்வு சுங்க கட்டண உயர்வு ஆகியவற்றினை கண்டித்து ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள மலை சார்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் ஆடு மாடு வளர்ப்புதான் அவைகள் வனப்பகுதியில் மேச்சலுக்கு கொண்டு செல்லும்போது அவற்றால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து பகுதியில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டு செல்லக்கூடாது என வனத்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். களக்காடு முண்டந்துறை ஆனைமலை ஸ்ரீவல்லிபுத்தூர் சத்தியமங்கலம் மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் 57 கிராமங்களில் தலா ஐந்தாயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் புலிகள் காப்பகம் அமைப்பதாக தெரிவித்து கிராம மக்களை வெளியேற மத்திய அரசு செய்து வரும் முயற்சியினை தடுத்தும் இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் கோவில்கள், மடங்கள், ஜமீன்கள், தனியாருக்கு சொந்தமான நிலங்களில் குத்தகைக்கு எடுத்து விவசாய பணிகளை செய்வோர்கள் பாதுகாக்க கூடிய குத்தகை பதிவு சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. தமிழகத்தினை தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் அமெரிக்கா சென்று தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தமிழகத்தில் தொழில் தொடங்க வரவழைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தொழில் தொடங்க விவசாய நிலங்களை தவிர்த்து தரிசி நிலங்களை தேர்வு செய்து தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக முதல்வரின் அமெரிக்கா பயணம் வெற்றி அடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள். மேக்கே தாட்டு பகுதியில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் உபரி நீர் முழுமையாக கிடைக்காது அதனால் ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. ராசி மணலில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் பெரு நிறுவனங்கள் அதே மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்திந்திய பெருமக்களின் மாநில மாநாடு வரும் ஜனவரி 26, 27,28 ஆகிய மூன்று நாட்கள் பேரணி, பொது கூட்டம் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் தமிழகத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பை போன்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களுக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் ஒகேனக்கல்லில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட செயற்குழுவில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார். பேட்டியின் போது அகில இந்திய செயலாளர் மருத்துவர் கே நாராயணா மாசுக்கட்டுப்பாட்டு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال