சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற
தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் 112 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தல்
கோவை வந்த வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 வது ஃபெடரேஷன் கோப்பை தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 24 ந்தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது..
சப் ஜூனியர்,ஜூனியர்,சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இதில்,பஞ்சாப்,ஹரியானா,உத்தரபிரதேசம்,மணிப்பூர் ,மகாராஷ்டிரா,கேரளா,தமிழ் நாடு என நாடு முழுவதும் இருந்து சுமார் 1800 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..
சான்சூ மற்றும் டவ்லு ஆகிய இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு அணி 44 தங்கம்,30 வெள்ளி,38 வெண்கலம் என 112 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது..
தமிழ்நாடு அணி சார்பாக கோவையில் இருந்து பங்கு பெற்ற 33 பேர் 16 தங்கம்,4 வெள்ளி,15 வெண்கலம் என 35 பதக்கங்கள் குவித்துள்ளனர்..
இந்நிலையில் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்..
இது குறித்து ஜான்சன் மாஸ்டர் கூறுகையில்,தேசிய,சர்வதேச போட்டிகளில் தமிழக அணி வீரர்,வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றி பெற்று கவனம் ஈர்த்து வருவதாகவும்,இதற்கு காரணமான தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் அப்பாவு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..
கோவையில் வூசு விளையாட்டு பயிற்சிக்கென தனியாக இடம் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதற்கு வூசு சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..
இந்நிகழ்ச்சியில், தொழில் நுட்ப இயக்குனர் ரவி,பொருளாளர் கோபி,மற்றும் பயிற்சியாளர்கள் ஜாக்கி சங்கர்,பெரியசாமி,சரவணன் உடனிருந்தனர்..