தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் நிலையில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசுந்தர் தலைமையில் கொடி அணிவகுப்பு மரியாதை நடந்தது.
பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்தப் பேரணியானது பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் துவங்கி, வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம் , ஸ்தூபி மைதானம் வழியாக காவல் நிலையத்தை சென்றடைந்தது.இப்பேரணியில் கமாண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
Tags
தருமபுரி