புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
புதுக்கோட்டை மார்ச் 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக உள்ளது. தற்பொழுது ஈரான், இஸ்ரேல், ஈராக், பகுதியில் போர் நடந்துவருவதால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் மும்மரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். நாளை பெட்ரோல் விலை அதிகரிக்கும் என பொய் பிரச்சாரம் பரவியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருந்தும் அதிக விலைக்கு விற்பதாக நினைத்து பெட்ரோல் இல்லை என அறிவிப்பு பலகை போட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது
Tags
புதுக்கோட்டை