ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து ஆய்வு.


பென்னாகரம், ஆக.07-

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்தும், வெள்ளப் பெருக்கின் போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2.5 லட்சம் கன அடி வரை உபரி நீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவின் பெயரில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோர்கள் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவது குறித்து சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இதற்கு முன்னதாக வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்கு உள்ளான நடை பாதை, அருவிப் பகுதிகள் ஆகியவற்றினை பார்வையிட்டனர். காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவது குறித்தும், வெள்ள பாதிப்புகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, அவரின் உத்தரவின் பேரில் அனுமதி வழங்கப்படுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றனர்.
Previous Post Next Post

نموذج الاتصال