கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரன்குட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ ராதாருக்குமணி சமேத கிருஷ்ணன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் அருகே உள்ள சூரண்குட்டை கிராமத்தில் புதியதாக அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் மற்றும் ஏனைய பரிவர தெய்வங்களின் பிரதிஷ்டைகள் செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேக விழாவிற்கான கொடி ஏற்றத்துடன் துவங்கிபெற்று வந்தது,
மங்கள இசையுடன் துவங்கிய இந்த மஹா குப்பாபிஷேக விழாவினை முன்னிட்டு வேதபாராயணம் விஸ்வக்சேன ஆராதனை, பாலகணபதி பூஜை, கங்கனம் கட்டுதல், புண்ணிய வாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது.
இதன் முன்னதாக புன்னிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை மேளத்தாளங்களுடன் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர் பின்னர் ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் திருக்கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக காலப் பூஜையில் வைத்து முதல் காலப் பூஜைகள் என பல்வேறு காலப் பூஜைகள் நடைப்பெற்றறு,
இதனைத் தொடர்து
காலை ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் மற்றும் ஏனைய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பு யாகப் பூஜைகள் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது
கோ பூஜைகளுடன் துவங்கிய இந்த யாகப் பூஜையின் போது பூர்ணாதி ஹோமத்துடன் கடம் புறப்பாடு நடைப்பெற்றது,
இதில் யாகசாலையில் இருந்து மேளத்தாளங்களுடன் எடுத்து செல்லப்பட்ட புனித நீரை திருக்கோவில் விமான கோபுரங்கள் மற்றும்
ஸ்ரீ ராதாருக்குமணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர தீபாதரனைகள் பூஜைகளுடன் பக்தர்களுக்கு தீர்த்தப்பிரதமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமன திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரப் பூஜைகள் நடைப்பெற்றறு
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ராதாருக்குமணி சமேத கிருஷ்ணன் சுவாமியை சூரன்குட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர் மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சூரன்குட்டை கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்களான பி.சி. சேகர், பையம்மாள், சீனிவாசன், திம்மராயன், பெருமாள், இராம மூர்த்தி, நாகராஜ்,
அனுமந்த் , சீனன் உள்ளிட்ட
சூரன் குட்டை கிராம மக்கள்
ஒன்றுனைத்து சிறப்பாக
செய்து இருந்தனர்.
Tags
கிருஷ்ணகிரி