கோயம்புத்தூர் பிப் 29-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 12,620 கிராம பஞ்சாயத்துகளுக்கும், ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கிடும் கலைஞர் Sports kits திட்டத்தை மதுரையில் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் Sports kits திட்டத்தின் கீழ் 33 வகையான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் - விளையாட்டு வீரர், வீராங்னைகளிடம் இன்று வழங்கி மகிழ்ந்தார்.
கூட்டுமுயற்சி - ஒற்றுமையுணர்வு இவைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் கிராமங்கள் தோறும் வலுப்பெற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு நட்சத்திரங்கள் உருவாக வேண்டுமென வீரர்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
Tags
கோயம்புத்தூர்