தமிழகத்தில் கோடைவெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்து முறையாக விதிமுறைகள் படி பின்பற்றப்படுகின்றவா , லாப நோக்கில் கலப்படங்கள், தரம் குறைவான மூலப் பொருட்கள், தயாரிக்க சுகாதாரமற்ற நீர் உபயோகப்படுத்தப்படுகின்றனவா என தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு விதிமுறை மீறல்கள் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ள மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் , எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பென்னாகரம் மற்றும் வண்ணாத்திப்பட்டி, எட்டியாம்பட்டி, கடமடை, கலப்பம்பாடி, பெரும்பாலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஐஸ், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் குளிர்பானங்கள் விநியோக, விற்பனை நிலையங்கள் மற்றும் பழகடைகள், பழரசங்கள் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வில் தயாரிப்பு நிறுவன சுற்றுப்புறம் மற்றும் உபகரணங்கள், மூலப்பொருள்கள் , சேர்மானங்கள், சர்க்கரை, லேபில்கள், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண் , உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்கள் உரிய முறையில் அச்சிடப்பட்டுள்ளனவா, டிரை (வெள்ளை)ஐஸ், ஐஸ்கிரீம் இருப்பு, பராமரிப்பு, தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது. ஐஸ் , ஐஸ்கிரீம், கோன், குல்பி உள்ளிட்டவை தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரா என பார்வையிட்டு கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் உபயோகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உபயோகப்படும் மூலப்பொருட்கள் தரமானதாகவும் உரிய காலாவதி தன்மை உடையதாக இருத்தல் அவசியம் எனவும் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் பராமரிக்க உரிய தலைஉறை, மேலங்கி அணிந்து பணியாற்றிட விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஆய்வில் பென்னாகரம் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மொத்த குளிர்பான விற்பனை நிலையத்தில் ஒரு சில உரிய விபரங்கள் இல்லாத ஐஸ் டியூப் குழல் போன்ற பாக்கெட்டுகளில் பல்வேறு நிறங்களில்
வைக்கப்பட்டிருந்தது .உடனடியாக அப்புறப்படுத்தி அது மாதிரியான உரிய விபரங்கள் லேபிள் இல்லாத சிறுவர்களை கவர்ந்து உடல் உபாதை ஏற்படுத்தும் குழல் டியூப் பானங்களை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ரூபாய் ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் எட்டியாம்பட்டியில் ஒரு குளிர்பான மொத்த விற்பனை நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் உரிய லேபிள் விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தது கண்டு உடன் அதை திருப்பி அனுப்ப எச்சரிக்கை செய்து மேற்படி விநியோகிப்பாளர்க்கு உடனடி அபராதம் ரூபாய்.2000 விதிக்கப்பட்டது.
ஊடக வலைதளம் மற்றும் பத்திரிகை செய்தியில் வந்த புகார் அடிப்படையில் மில்க் ஷேக் வகைகளும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பிட்ட பிரபல பிராண்டு வகையில் இரு வேறு விதமான மில்க் ஷேக்குகள் புகார் தெரிவிக்கப்பட்ட கடையிலும் வேறு ஒரு உணவகத்திலும் சம்பந்தப்பட்ட மில்க் சேக் நிகழ்வு இடத்திலேயே கட் செய்து பார்வையிட்டு சோதிக்கப்பட்டதில் எவ்வித மாறுபாடும் காணப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரி சேகரம் செய்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது.
புகார் குறித்து கம்பெனி இடம் விசாரித்ததில் வாங்கிய மில்க் ஷேக் பாக்கெட்டுகளை முறையாக பராமரிப்பு இல்லாவிட்டாலும், நேரடி சூரிய ஒளிப் படும் இடத்தில் வைத்திருந்தாலோ, வெப்பம் அதிகம் இருந்தால் ஒரு சில பாக்கெட்டுகளில் பால் திரிந்து ஏடு போல் காணப்படலாம், வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.முன்பாக அது குளிர் நிலையில் இருந்து இருத்தல் வேண்டும் வாங்கிய பின் நன்றாக குலுக்கி குடித்தல் வேண்டும் என தெரியப்படுத்தினர்.
இது போன்ற தவறுகள் மேலும் தொடரும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. பழக்கடைகள், பழரசங்கள் விற்பனையாளர்கள் சுகாதாரம் பின்பற்றி விற்பனை செய்திடவும் உபயோகப்படுத்தப்படும் பழங்கள் தரமானதாகவும்,குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருத்தல் அவசியம் என பரிந்துரை செய்யப்பட்டது. குளிர்பானங்கள் குடிநீர் கேன்கள் உள்ளிட்டவை நேரடி வெயில் படாமல் பராமரித்து விற்பனை செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags
பென்னாகரம்