பெரியபாளையம் ஊராட்சி சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார்10,000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் வணிக வளாகங்கள் ஹோட்டல்கள் வீடுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரத்தில் ஊராட்சியின் சார்பில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் கொட்டிச் செல்வார்கள் அப்படி கொட்டி செல்லும் குப்பைகளை மறுநாள் ஊராட்சியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் வைத்து குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்துவது வழக்கம். 


ஆனால் குப்பை தொட்டிகள் பழுதடைந்து சரியான முறையில் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பெரியபாளையம் ஊராட்சி பாளையக்காரர் தெரு, பெரியபாளையம்  காவல் நிலையம் சாலை அருகே மற்றும் கலைஞர் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் வெளியேறும் குப்பைகள் தேங்கி நிற்கின்றன. இதனை ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் அப்புறப்படுத்தாததால்  அப்பகுதிகள் சுற்றித் திரியும் மாடுகள், பன்றிகள், நாய்கள், உள்ளிட்டவை குப்பையில் உணவு தேடி கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. 


இதனால் அவ்வையாகச் செல்லும்  வாகன ஓட்டிகளும் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நாள்தோறும் குடியிருப்பு ஹோட்டல்கள் வணிக வளாகங்களில் இருந்து  வந்து சேரும் குப்பைகளை தேங்காத வண்ணம்  பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் முறையாக கண்டுகொண்டு குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்று  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Previous Post Next Post

نموذج الاتصال