பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 145 - வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூர் கிழக்கு ஒன்றியம் கட்டரசம்பட்டியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு ஒன்றிய செயலாளர் கோ.சந்திரமோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமூக நீதி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணியின் அமைப்பாளர் தேசிங்குராஜன், துணை அமைப்பாளர் ரஜினிமாறன், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகநதி, பெருமாள், உமாபதி, பழனி, இளங்கோ, தனபால், ராஜசேகர், தமிழ் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
அரூர்