தருமபுரி செப் 19-
நாமக்கல் மாவட்டத்தில், சவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்ததும், உடல் நலன் பாதிக்கப்பட்டு நாற்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்கை்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவத்தை தொடர்ந்து தருமபுரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் உணவகங்ளில் திடிர் ஆய்வு மேற்கொண்டனர்..
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், குமணன்,நந்தகோபால், கந்தசாமி, உள்ளிட்ட அலுவலர்கள், தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள, உணவகங்கள், துரித உணகங்களி்ல் திடிரென உள்ளே நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறைச்சிகள் தயார் செய்யப்படுகிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படு்ம் இறைச்சி தரமானதாக உள்ளதா, கெட்டுப்போன இறைச்சி எதாவது பயன்படுத்தப்படுகிறதா, இதே போல சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மற்றும் செயற்கை நிறமிகள் உள்ளிட்டவைகளயும் அதிகாரிகள் பரிசோதித்து ஆய்வினை மேற்கொண்டனர்..
உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவகங்களில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படு்ம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
தருமபுரி நகரில் மாலை நேர உணவகங்கள், மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Tags
தர்மபுரி