திருப்பூர், செப்.24-
திருப்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட படியூர் அருகே வருகின்ற 24ம் தேதி தி மு க மேற்கு மண்டல பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் திமு க தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பிமாண்டமான பந்தல், மேடை அமைக்கும் பணி, உணவு கூடங்கள் அமைக்கும் பணி, என பல்வேறு பணிகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் படியூர் அருகே நடைபெற்று வரும் நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமினாதன் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தி.மு.க பூத் முகவர்கள், பாசறை கூட்டம் முடிவடைந்த நிலையில்,மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி, பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் படியூர் அருகில் வருகின்ற 24 ந் தேதி காலை 10 மணியளவில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது, இதில் தி முக வின் 15 மாவட்டங்களுக்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதியில் இருந்து 14,411 பூத் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பூத் முகவர்களின் முக்கியத்துவம்,
கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதன் பொறுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, தேர்தல் நேரங்களில் வாக்குகளை திமுகவிற்கு சாதகமாக பெற்று தெருவது, எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் பொய்
குற்றச்சாட்டுகளுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பதில் அளிப்பது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து மாலை 4.00 மணியளவில் தமிழக முதல்வரும், தி மு க தலைவருமான மு. க.ஸ்டாலின் இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார். மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags
திருப்பூர்