தருமபுரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு..
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே தாளநத்தம் கிராமத்திற்குட்பட்ட டி. அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனு (48 ) என்பவர் தனது தாய், மனைவி, மகள், என நான்கு பேருடன் திடிரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தலையில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..
தங்களுக்கு பூர்விகமாக சொந்தமான 1.40 ஏக்கர் விளை நிலத்தை தங்களது உறவினர்களான 1.லோகநாதன் 2.இவரது மனைவி சவுதாமணி 3. மகன் புவியரசு 4.ப்ரேம்குமார், பக்கத்து வீட்டிலிருக்கும் மற்றொரு உறவிறரான 5. குமரேசன், உள்ளிட்டோர், போலி ஆவணங்கள் மூலம் தங்களது நிலத்தை அபரிக்க முயன்று வருவதாகவும், இது தொடர்பாக கடத்தூர் காவல்துறையில் புகராளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது புகாராகும்..
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் தீ்க்குளி்க்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர், இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்..
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags
தர்மபுரி