இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு தர்மபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் C.செல்வராஜ் மற்றும் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் K.மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி EX.MLA, தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார் MP அவர்கள் கலந்து கொண்டார்
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு கழக உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பதன தீர்மானிக்கப்பட்டது
3. வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மாண்புமிகு அமைச்சர் இளைஞர் அணி செயலாளர் அவர்கள் வருவதைஒட்டி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பெருந்திரளாக இளைஞர்களை செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கு பெற வைப்பது என தீர்மானிக்கப்பட்டது
இந்த நிகழ்வில்
மாநில ,மாவட்ட ,ஒன்றிய ,நகர ,பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் , அணிகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மற்றும் திமுக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags
அரசியல்