வேலூர் அக் 05-
வேலூர் மாவட்டம் K.V குப்பம் தாலுகா காலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் தனியார் வங்கியின் ATM ல் பணம் நிரப்பும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இன்று மதியம் 12:20 மணியளவில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள ATM லவ் பணம் நிரப்ப தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கௌதமபுரம் அருகே செல்லும் பொழது திடீரென ஒரு காட்டு பன்றி சாலையின் குறுக்கே வந்தது. இதில் தன் கட்டுபாட்டை இழந்த சுரேஷ் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஐ அழைத்தனர். உடனடியாக அனைக்கட்டு பகுதியில் இயங்குகின்ற 108 ஆம்புலன்ஸ்ல் மருத்துவ உதவியாளர் செல்வி மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு பலத்தகாயமடைந்த சுரேஷை மீட்டு அனைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக அவரது உறவினர் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கும் தகவல் தரப்பட்டது.
பின்னர் போலீசார் முன்னிலையில் சுரேஷின் கை பையில் இருந்த ரூ. 17 லட்சத்து 40ஆயிரம் (17,40,000) பணத்தை சுரேஷ் பணியாற்றும் நிறுவன மேலாளர் ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செல்வி மற்றும் பாண்டியனின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Tags
வேலூர்