காக்கும் கரங்கள் என்ற வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒன்பது லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் நிதி

நாகப்பட்டினம் அக் 05-
 
நாகையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்க்காக வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பணம் வசூல் செய்து வழங்கிய காவலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் குடும்பத்தாருக்கு ஒப்படைப்பு

 நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இவர் மன்னார்குடி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருடன் 2016 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சுமார் 8,500 காவலர்கள் இணைந்து 2016 batch காக்கும் கரங்கள் என்ற whatsapp குழுக்கள் மூலம் உயிரிழந்த பிரேம்குமார் குடும்பத்தினருக்கு ஒன்பது லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களின் முன்னிலையில் உயிரிழந்த காவலர் பிரேம் குமாரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுவரை இது போல் அசாதாரமான சூழ்நிலையில் உயிரிழந்த 12 காவலர்களின் குடும்பத்திற்கு 2016 batch காக்கும் கரங்கள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஒரு கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 954 ரூபாய் (1,50,34,954 ) நிதி திரட்டி ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post

نموذج الاتصال