கட்சிதான் முக்கியம் 72 மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கான காணொளி வாயிலாக நடந்த கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு


சென்னை அக் 1-

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் துளிகள் ;

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.


முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிக கடுமையாக கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியபடி நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதை பல மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து வந்தாலும், சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் இந்த விஷயத்தில் மிக மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறீர்கள் இது நல்லதல்ல என்று கடுமையாக சாடி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் யாராவது தோற்றால் அந்த மாவட்ட செயலாளர் நிச்சயமாக பதவி நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கட்சிதான் முக்கியம்.

கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்.

ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் சிலர் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது.. 

தொகுதி பொறுப்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பையும் அனைவரும் வழங்க வேண்டும்.

தொகுதி பொறுப்பாளர்களுக்கு உத்தரவு 

சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வாரம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்கு சென்று , நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாவட்ட செயலாளர், அப்பகுதி நிர்வாகிகள் செய்துள்ள களப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து எனக்கு அறிக்கையாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post

نموذج الاتصال