தர்மபுரி அக் 14-
மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தார்
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் விவரம் பதிவு செய்யும் நிகழ்ச்சி தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், செல்வராஜ், ராஜகோபால், கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்து இளைஞர் அணி நிர்வாகிகளிடம் அதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் அவர் 2-வது இளைஞர் அணி மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பெயர்களை பதிவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு, ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags
தர்மபுரி