நல்லம்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி அக் 26-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் தருமபுரி மாவட்டம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சமுதாய வளைகாப்பு விழா நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தலைமையேற்று விழா பேரூரை ஆற்றினார். அதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டாரத்திற்கு உட்பட்ட 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி பெண்களுக்கு வளையல் அனிவித்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், தொகுதி மேற்பார்வையாளர்கள் சந்திரா, தமிழ்ச்செல்வி, ஜெயா, அன்புகரசி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال