கோயம்புத்தூர் அக் 24-
கோவை மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 20-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் தற்போது 5-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானத்தில் இன்று காலை திரண்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
Tags
கோயம்புத்தூர்