தருமபுரி அக்-11,
நூறுநாள் வேலை இடங்களில் அடிப்படை வசதி செய்ய கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை தினக்கூலி ரூபாய் 600 வழங்கவேண்டும்.வேலை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகளான நிழற்கூடம் மருத்துவவசதி குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்.வேலைசெய்து முடித்த தொழிலாளர்களுக்கு சமபளபாக்கி உடனே வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் எம்.முத்து , மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன்,ஜி.பாண்டியம்மாள்,மாவட்ட துணை செயலாளர்கள் சி.ராஜா,எம்.செல்வம்,மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.வெங்கடாச்சலம் பி.கிருஷ்ணவேணி , மாவட்டக்குழு உறுப்பினர்கள் தீ.மாரியப்பன்,கே.குமரேசன்,டி.ஜடையாண்டி,பி.வீரப்பன்,கே.எல்லப்பன்,எம்
தங்கராஜி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
Tags
தர்மபுரி