மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு வனத்துறை வரலாற்றில் முதன்முறையாக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வன அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் வகையில், விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

சென்னை அக் 03-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், தமிழ்நாடு வனத்துறை வரலாற்றில் முதன்முறையாக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வன அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் வகையில், 2022-23ஆம் ஆண்டுக்கான வளங்குன்றா வனமேலாண்மை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டதற்கான விருதினை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திரு.எஸ். ஆனந்த், அவர்களுக்கும், மனித வன உயிரின மோநல்கள் மேலாண்மை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டதற்கான விருதினை இராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் நிரு. பாகன் ஜெக்தீஸ் சுதாகர், இ.வட்ட அவர்களுக்கும், வள உரிமைச்சட்ட நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டதற்கான விருதினை கன்னியாகுமரி வன உயிரின காப்பாளர் திரு. எம். இளையராஜா, ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.சுப்ரியா சாஹூ  ஆகியோர் உள்ளனர்.
Previous Post Next Post

نموذج الاتصال