தருமபுரி அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்



தர்மபுரி அக் -3

அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் மீது கார்ஏற்றி கொலை செய்த ஒன்றிய பிஜேபி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்களை முற்றிலுமாக நீக்கவேண்டும். விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யவேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி நாள் ஒன்றுக்கு ரூ 600 கூலி வழங்கவேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை நீக்கவேண்டும். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்யவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ரேஷன் முறையை பலப்படுத்தவேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளரும் ஒருங்கிணைப்பாளருமான சி.நாகராசன்‌தலைமைவகித்தார்.
எஸ்.கே.எம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.அர்சுணன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி, சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்ட செயலாளர் கே.அன்புமணி,மாவட்ட செயலாளர் பி.எம்.சன்முகராஜா ,ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கே.சிவலிங்கம், மாவட்ட செயலாளர் சி.சண்முகம்,எஸ்எம்எஸ், பேரவை செயலாளர் ஆர்.முருகானந்தம், மாவட்ட செயலாளர் எம்.அர்சுணன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சி.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.
Previous Post Next Post

نموذج الاتصال