தருமபுரி அக் 11-
சென்னையில் போராட்டம் நடத்திவரும் எம்ஆர்பி செவிலியருக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எம்.ஆர்.பி.செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சென்னை மருத்துவக் கல்வி இயக்கம் வளாகத்தில் செவிலியர்கள் போராடி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய எம்.ஆர்.பி.
செவிலியர்களை காவல்துறை
கைது செய்து செய்ததை கண்டித்தும்
அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், தேர்தல் கால
வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயவாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.
மாநிலதுணைத்தலைவர் கோ.பழணியம்மாள்,
மாவட்ட செயலாளர் ஏ.சேகர் மாவட்ட பொருளாளர் பி.எஸ்.இளவேணில், ஜாக்டோ ஜியோ ,நிதி காப்பாளர் கே.புகழேந்தி ,வட்ட நிர்வாகிகள் குமரன்,பன்னீர்செலவம் , ஆகியோர் பேசினர்.
Tags
தர்மபுரி