தர்மபுரியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி

தர்மபுரி அக் 09-

மாவட்ட அளவிலான அபாகஸ் மட்டும் இதர போட்டியில் 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பல கோப்பைகளை வென்றுள்ளனர்.
தர்மபுரி  பூபதி திருமண மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை  நான்காவது மாவட்ட அளவிலான அபாகஸ் மற்றும் ஓவியம், கையெழுத்து போன்ற போட்டிள் நடைபெற்று முடிந்தன .
அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு  தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர்  திரு. S.P. வெங்கடேஸ்வரன் MLA மற்றும் விஸ்வபாரதி பள்ளி தாளாளர் திரு K.இரவி அவர்களும், செவன்த்டே   பள்ளி தாளாளர் திரு. புஷ்பராஜ் அவர்களும், தருமபுரி கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், அவர்களும்,  சேலம் மாவட்டம் மகளிர் திட்ட அலுவலர்  திரு. பெரியசாமி அவர்களும், தருமபுரி வனச்சரக அலுவலர் திரு. மு.மாது அவர்களும், தருமபுரி கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.கோ.அசோக்குமார் அவர்களும் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளது யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் நிறுவனம் அதில் பல மாணவிகள் கோப்பைகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ்  நிறுவனத்தின் மேலாளர்  திருமதி. நந்தினி அழகர் மற்றும்  தலைமை மதிப்பீட்டாளர்   திருமதி.ஜான்சிராணி ஆகியோர்க்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு S.P.வெங்கடேஸ்வரன்  பாராட்டுக்களை தெரிவித்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال