தருமபுரி அக் -2,
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் சாசனப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொறுப்பாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முன்னாள் எம்.பி.
பி. தீர்த்தராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.கு.பாண்டியன், விசிக நிர்வாகிகள் எம்.எஸ்.ராமன், கே.ராஜா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார், மாவட்ட துணைச் செயலாளர்கள் பைரோஸ் , நகர செயலாளர்கள் ஷாஜகான், ரபீக், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னணி தலைவர்கள் எஸ். கிரைசாமேரி, கே.பூபதி, சுசீலா, தமிழ்மணி, உமா, ராஜம்மாள், நகர செயலாளர் நிர்மலா ராணி, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சிராஜுதீன் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ம. சிங்காரவேல், சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags
அரசியல்