தர்மபுரி அக் 02-
தர்மபுரி மாவட்டம் நூலஅள்ளியில் NSB விளையாட்டு குழு சார்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சுமார் 31 அணிகள் போட்டியில் பங்குபெற்றது.
இன்று போட்டிகள் முடிவுற்ற நிலையில் முதலாம் பரிசு WCC கடத்தூர் கிரிக்கெட் குழுவினரும் , இரண்டாம் பரிசு NSB மிட்டா நூலஅள்ளி , மூன்றாம் பரிசு ரஞ்சித் பிரதர்ஸ் அக்ரஹார தெரு, நான்காம் பரிசு இலக்கியம் பட்டி, ஐந்தாம் பரிசு முக்கல்நாயக்கன்பட்டி வென்றது
இந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற WCC குழுவினருக்கு எஸ். பெரியண்ணன், திமுக கிளை செயலாளர் அவர்கள் முதல் பரிசு ரூ 13001 வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உடன் உதயம் காளியப்பன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், காந்திநகர் விக்னேஷ் , RO சி.பெரியசாமி மற்றும் NSB விளையாட்டு குழுவினர் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags
விளையாட்டு