ஒகேனக்கல் - வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் நவ 7-

காவிரி கரையோர பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர்வரத்தானது படிப்படியாக தற்போது அதிகரித்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, பெய்யும் மழையைப் பொறுத்து அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.
Previous Post Next Post

نموذج الاتصال